ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு கனடாவிற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய வலயத்தினைச் சேர்ந்த நாடுகளிலிருந்து இந்த செயற்பாடு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்படும் கனடாவுக்கு இத்தகைய உதவியை வழங்குவது ஐரோப்பிய வலய நாடுகளின் கடமை என்றும் அவர் கூறினார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழு உறுப்பினர்கள் இந்த விடயத்தில் அடுத்தகட்டச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.