ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, அனைவருக்குமான நீதிச் சமத்துவத்தை பாதுகாத்து மேம்படுத்துவதற்கான பொதுக் கொள்கைகளை கடைப்பிடிக்க சிறிலங்காவுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்ரனி பிளிக்கன் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனநாயக செயற்பாடுகளின் வெற்றி என்பது இந்தக் கொள்கைகளை எவ்வாறு அனைத்து குடிமக்களுக்காகவும் நிலை நிறுத்துகிறோம் என்பதிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியப் பாதுகாப்பை மேம்படுத்தவும், இந்தோ பசுபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காகவும் சிறிலங்காவின் ஒரு பங்காளராக, நண்பனாக இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் குறிப்பிட்டுள்ளார்.