நீதிமன்றத் தடை உத்தரவை மீறி வவுனியாவில் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக கடைப்பிடித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
காலை 10 மணிக்கு பழைய பேருந்து நிலையப் பகுதிக்கு முன்பாக ஒன்று கூடிய உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன் அதனை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த போதும், அதனை மீறி போராட்டம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.