ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு (alexi navalny) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி புடினையும் அவரது அரசின் ஊழலையும் கடுமையாக எதிர்த்து வரும், எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு (alexi navalny) மொஸ்கோ நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், போன்ற பல்வேறு நாடுகள் இந்த சிறை தண்டனை நியாயமானதல்ல என்றும் மோசமான நடவடிக்கை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளன.
அதேவேளை, அலெக்ஸிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர் என அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.