உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் பெரும்பாலும் ‘எம்’ என்ற எழுத்தில் தான் தொடங்குகிறது’ என ராகுல் காந்தி கீச்சகத்தில் பதிவிட்டதால், கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
”ஏன், சர்வாதிகாரிகளின் பெயர்கள் பெரும்பாலும் ‘எம்’ என்ற எழுத்தில் தொடங்குகிறது என பதிவிட்டு, ”மார்கோஸ், முசோலினி, முபாரக், முஷாரப், மைக்கோம்பெரோ, மிலோசெவிக், மொபட்டு ” என உலகின் சில சர்வாதிகாரிகளின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு பிரதமர் மோடியையும் சர்வாதிகாரிகளின் பட்டியலில் குறிப்பிடும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதையடுத்து, அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.