முன்னாள் இராணுவ உயரதிகாரியான ஜொனதன் வான்ஸ் (Jonathan Vance) விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தில் உள்ள பெண்களின் சாட்சிகளின் படி இவரிடத்தில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கனடிய முப்படைகளின் பொறுப்பதிகாதிகாரத்தினை ஏற்றுள்ள அட்மிரல் ஆர்ட் மெக்டொனால்ட் (Art McDonald), வான்ஸ் தொடர்பான உள்ளக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் இராணுவ பெண்களுடன் பொருத்தமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதுள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில் அவை தொடர்பில் விரைவில் பகிரங்க விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.