வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர் ந்திருந்தது
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இந்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கறுப்புத் துணிகளால் முகத்தை மறைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பங்கேற்றிருந்ததோடு காணமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையும் தாங்கியவாறு அமர்ந்திருந்தனர்.