இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள், சவுதி அரேபியாவுக்குள் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, பாகிஸ்தான், பிரேசில், போர்ச்சுகல், பிரித்தானியா, துருக்கி, தென்ஆபிரிக்கா, சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் , லெபனான், எகிப்து, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 20 நாடுகளுக்கே, சவுதி அரேபிய தடை விதித்துள்ளது.
இந்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அல்லது இந்த நாடுகள் வழியாக பயணம் செய்பவர்களுக்கு நாட்டிற்குள் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாகவும், பிப்ரவரி 3 ஆம் நாள் முதல் இந்த தற்காலிக தடை அமுல்படுத்தப்படுவதாகவும், சவுதி உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி குடிமக்கள் அல்லாதவர்கள், தூதரக அதிகாரிகள், சுகாதார பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது இந்த அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தடை அமுல்படுத்துவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக இந்த நாடுகளுக்கு பயணித்த ஏனைய நாட்டவருக்கும் இந்த தடை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.