கனடியத் தமிழர் சமூகம்இ கனடியத் தமிழ் மாணவர் சமூகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தாயகத்தில் நடைபெறும் பொத்துவிலிருந்து பொலிகண்டி வரையிலான நடைபேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக கவனயீர்பு பாரவூர்தி பவனி இன்று ஆரம்பமானது.
தமிழ் இனஅழிப்பை தொடரும் இனவாத சிறிலங்கா அரசின் முன்னெடுப்பில் சுதந்திர நாளை பெப்ரவரி 4 ல் கொண்டாடும் அதே நாளில் உலகெங்கும் வாழும் தமிழீழ தேசிய மக்கள் ஆண்டு தோறும் அதே நாளை துக்க நாளாக நினைவு கூறுவது வழக்கம்.
அதற்கு அமைவாக தமிழீழ மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டுஇ தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்களமயமாக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பு தொடர்ச்சியாக பல வழிகளிலும் அரங்கேறிக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் வகையிலான கோசங்களுடன் பார ஊர்திகள் அணிவகுத்தன.
கொரோனா பாதுகாப்பு விதிகளுக்கு அமைவாக பாரவூர்தி பவனி ஆரம்பமாகியதோடு. இனப்படுகொலைக்கு நிதி வேண்டும், தமிழின பூர்வீக நிலங்களை, ஆக்கிரமிப்பதை நிறுத்து, உள்ளிட்ட பல வாசகங்களுடன் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.