ஐக்கிய சிறிலங்காவுக்குள் நீதி, சமாதானம், சமத்துவத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதே, சிறிலங்காவின் நலன்களுக்கு உகந்தது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே, இந்திய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்தமாதம் சிறிலங்கா தலைவர்களை சந்தித்த போது, நல்லிணக்க முயற்சிகளுக்கான தனது ஆதரவை வெளியிட்டதாகவும், ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தம் உள்ளிட்ட அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு குறித்து சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கும் இது பொருந்தும் என்றும், இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.