சமீபத்திய ப்ளூம்பெர்க்(Bloomberg) கொரோனா பின்னடைவு தரவரிசைப்படி, தொற்றுநோய்களின் போது வாழச் சிறந்த 13ஆவது நாடாக கனடா மாறியுள்ளது.
ப்ளூம்பெர்க்கின் (Bloomberg) பட்டியலின்படி, கனடா 53 நாடுகளில் பதின்மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தடுப்பூசிகளுக்கான கனடாவின் அணுகல் 330 சதவீதமாக மதிப்பிடப்படுகிறது. இந்த சதவீதம் வேறு எந்த நாட்டையும் விட கணிசமாக அதிகமாகும்.
இருப்பினும், நேர்மறை சோதனை வீதத்தின் சதவீதத்தைப் போலவே நோயாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
நியூஸிலாந்து, சிங்கப்பூர் மற்றும் அவுஸ்ரேலியா ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ள நாடுகள் என்றும் அவை தங்கள் மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடத் தொடங்கவில்லை என்று அறிக்கை விளக்குகிறது.