பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் பேரணி, கிழக்கு மாகாணப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு வடக்கு மாகாணத்துக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.
நேற்று முன்தினம் பொத்துவிலில் தொடங்கப்பட்ட இந்தப் பேரணி நேற்று இரவு திருகோணமலை நகரை சென்றடைந்தது.
மூன்றாம் நாளான இன்று காலை திருகோணமலை சிவன்கோவிலில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பேரணி ஆரம்பமானது.
நிலாவெளி, குச்சவெளி, புல்மோட்டை, இறக்கக்கண்டி வழியாக இந்தப் பேரணி முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் – கொக்குத்தொடுவாய் பகுதியை இன்று நண்பகல் அடைந்துள்ளது.
பேரணிக்கு வழிநெடுகிலும் உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் வரவேற்பளித்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், வடக்கு- கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.