பிரிட்டிஷ் கொலம்பியவில் உள்ள நடுத்தர மற்றும் உயர் வகுப்பு பாடசலைகளிள் உள்ளகப் பகுதிகளில் மருத்துவ முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மருத்துவ குணாம்சம் அற்ற முகக் கவசங்களை உள்ளக பகுதிகளில் அணிந்திருத்தல் அவசியமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மேலும் மேம்பட்ட தகவல்களை பிரட்டிஷ் கொலம்பிய மாகாண கல்வித்துறை பாடசாலைகள் ஊடாக மாணவர்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா பாதுகாப்பு தொடர்பாக அமுலாக்கப்பட்டுள்ள ஏனைய விதிமுறைகள் பாடசாலைகளில் பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.