ரொராண்ரோ பெரும்பாக பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்று, அண்மையில் பதவி விலகிய கனடாவின் ஆளுனரின் பெயரைச் சூட்டிக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
தமது பணியிடத்தில் துன்புறுத்தல்கள் இடம்பெறுவது தொடர்பான அறிக்கை கிடைத்ததை அடுத்து, ஆளுநர் ஜூலி பயேட் (Julie Payette) அண்மையில் பதவி விலகியிருந்தார்.
இந்த நிலையில் விட்பியில் (Whitby) உள்ள துர்ஹாம் (Durham) மாவட்டப் பாடசாலையின் பெயரை, ஜூலி பயேட் பொதுப் பாடசாலையாக மாற்றிக் கொள்வது குறித்து கலந்துரையாடி வருவதாக, நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாடசாலை சமூகத்துடன் கலந்துரையாடி அடுத்த சில மாதங்களுக்குள் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.





