இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சிறிலங்கா பாதாளக்குழுத் தலைவரான அங்கொட லொக்காவின் உடலை உறுதி செய்ய சிறிலங்காவின் உதவியை இந்தியா கோரியுள்ளது.
இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் மத்தும லசந்த சந்தன பெரேரா எனும் அங்கொட லொக்க என்பவரின் சடலம், உண்மையில் அவருடையதா என்பதை உறுதி செய்வதற்காக இந்திய தேசிய விசாரணை பிரிவு சிறிலங்காவிடம் உதவி கோரியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
களுத்துறை, எதனமடல பகுதியில் சிறைச்சாலை பேருந்தின் மீது தாக்குதல் நடத்தியதின் பின்னர் அங்கொட லொக்கா இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றிருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.