பாகிஸ்தானில் பயணக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, தமது இராணுவ வீரர்களை, மீட்பதற்காக, ஈரான் இராணுவம் சேஜிக்கல் (surgical) தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் – ஈரான் எல்லைப் பகுதியில் உள்ள சிஸ்தான் பகுதியில், ஜெய்ஷ் அல் அதல் (Jaish ul-Adl ) எனும் பயங்கரவாத குழு 11 ஈரானிய இராணுவ வீரர்களை கடந்த 2018ம் ஆண்டு கடத்திச் சென்றிருந்தது.
பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டிருந்த அவர்களில், 5பேர், 2018ஆம் ஆண்டிலும், நான்கு பேர், 2019ஆம் ஆண்டிலும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 2 பேரை தொடர்ந்து தடுத்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில், பயங்கரவாதிகள் முகாம் மீது கடந்த 2-ம் நாள் இரவு ஈரான் இராணுவம் சேஜிக்கல் தாக்குதல் நடத்தி, இரண்டரை ஆண்டுகளாக பயணக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த தமது நாட்டு வீரர்களை மீட்டுள்ளது.