உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் காணாமல்போன 9 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பனிப்பாறைகள் உடைந்து அலக்நந்தா மற்றும் தாவ்லி கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரிஷி கங்கை அணை உடைந்துள்ளது.
கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இங்கு 600 ராணுவ வீரர்கள், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், விமானப் படையின் மூன்று உலங்குவானூர்திகள் என்பன மீட்புப் பணிகளுக்காக களமிறக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், பனிப்பாறை உடைப்பால் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் வரையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.