கியூபாவின் வரலாற்றில் முதல் முறையாக நாட்டின் பெரும்பாலான தொழில்களில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கியூபாவில் 127 வகையான தொழில்களில் மட்டுமே தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி இருந்து வருகிறது.
தற்போது 2,000க்கும் மேற்பட்ட தொழில்களில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படுவதாக கியூபாவின் தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், எதிர்காலத்தில் மிகக் குறைவான தொழில்துறைகள் மட்டுமே அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை மற்றும் கொரோனா பெருந்தொற்றால், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கியூபாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலிலே, பெருமளவு தொழில்களை தனியாரிடம் ஒப்படைக்க கியூபா அரசாங்கம் முடிவு செய்துள்ளது,