வியட்நாம் எல்லைக்கு அருகில் சீனா ஏவுகணைத் தளம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
வியட்நாம் எல்லைக்கு அருகில், வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை தளத்தை சீனா உருவாக்குவதாக, தென்சீன கடல் செய்தி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயமதிப் படங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் அங்கு ஒரு உலங்குவானூர்தி தளம் கட்டப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அங்குள்ள இராணுவ விமான தள ஓடுபாதையில் ராடர்கள் மற்றும் குறைந்தது ஆறு ஏவுகணைகள் இருப்பதையும் செய்மதிப் படங்கள் காட்டுவதாக கூறப்படுகிறது.
தென்சீனக் கடலில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் அணியை தனது விமானப்படை விரட்டியதாக சீனா அறிவித்த ஒரு வாரத்திற்குப் பின்னர், இந்த தகவல் வெளிவந்துள்ளது.





