சீன அரச தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றிய அவுஸ்ரேலிய ஊடகவியலாளர் செங் லீ (Cheng Lee) சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அரச இரகசியங்களை வழங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஓகஸ்ட்டில் செங் லீ, (Cheng Lee) ஒரு வகையான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதுடன் இந்தக் காவல், வழக்கறிஞர்களை அணுகுவதற்கான வாய்ப்பை மறுத்திருந்ததோடு சிறையில் அடைத்து வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் சீன காவல்துறைக்கு அனுமதியை அளிக்கின்றது.
எனினும் அவர் இன்று காலையில் சீன அரசாங்கத்தின் உத்தரவில் முறையாக கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, செங் லீயை (Cheng Lee) முறையாகக் கைதுசெய்வது குறித்து கடந்த வார இறுதியில் சீன அதிகாரிகள் அறிவித்தல் வழங்கியதாக அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்ன் (Marice Payne) தெரிவித்துள்ளார்.