அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) மற்றும் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிக்கான அனுமதிகளை கனடிய சுகாதாரத்தரப்பு வழங்கும் பட்சத்தில் மிக விரைவில் ஒருதொகுதி தடுப்பூசிகளை நாட்டுக்குள் வருவிப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் அனித்தா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் இந்த இரண்டு நிறுவனங்களினதும், கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நடவடிக்கைகளை கனடிய சுகாதாரத்துறை முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த தடுப்பூசிகளின் மூல ஆவணப்பிரதிகளையும் சுகாதாரத்துறை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சுகாதாரத்துறையின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவற்றை நாட்டுக்குள் வருவிப்பதற்கு எவ்விதமான தாமதங்களும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.





