ஒன்ராறியோவின் கிழக்கு பகுதியில் மூன்று பிராந்தியங்களில், வீடுகளை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகள் புதனன்று தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
வீடுகளுக்குள் தங்கியிருக்கும் உத்தரவு ஒன்ராறியோ அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, வீடுகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
ஒன்ராறியோவின் கிழக்குப் பகுதியில் சில இடங்களில் இன்று இரவுடன், வீட்டுக்குள் முடங்கும் உத்தரவு தளர்த்தப்படுகிறது.
ஏனைய பகுதிகளிலும் வரும் 22ஆம் நாளுடன் முழுமையாக இந்த உத்தரவு நீக்கப்படவுள்ளது.
இந்த நிலையிலேயே. வாடகை செலுத்தாமல் தங்கியிருப்போரை வீடுகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.