யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுகளில் கலப்பு மின் திட்டங்களை அமைக்கும் ஒப்பந்தம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, இந்தியா முறைப்பாடு செய்துள்ளது என்று, சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரம்புக்வெல்ல, இந்திய அரசாங்கத்தினால் இந்த திட்டங்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த திட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், முறைப்பாடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்படும் என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.