வடகொரியாவுடன் இணைந்து அணு சோதனையில் ஈடுபடுவதற்கு ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஐநா தகவல் வெளியிட்டுள்ளது,
இது தொடர்பாக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுடன், ஈரான் தலைவர் அயோடெல்லா அல் கமேனி உடன்பாடு செய்துள்ளார் என்றும் அந்த தகவல் கூறுகிறது.
ஐ.நா உயரதிகாரிகள் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு நேற்று வழங்கியுள்ள சர்வதேச அறிக்கையிலேயே, இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது, அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளையும் வடகொரியாவைச் சுற்றியுள்ள ஆசிய நாடுகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.