எயர் கனடா நிறுவனம் மேலும் 1500 தற்காலிக பணியாளர்களை வேலையில் இருந்து இடைநிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
மேலும் பல வழித்தடங்களில் வானூர்தி சேவை இடைநிறுத்தப்படவுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, எயர் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சர்வதேச நகரங்களுக்கான 17 வானுர்தி சேவைகள் ஏப்ரல் 30ஆம் நாள் வரை இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக பெப்ரவரி 12ஆம் நாள் வரை இந்த வழித்தடங்களில் வானூர்தி செவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.





