2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர் சீனாவின் வுகானில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு கூறி உள்ளது.
கொரோனா நோய் தோற்றம் குறித்து, சீனாவில் தடயங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள், இதுவரையான தமது கண்டுபிடிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
“2019 டிசம்பருக்கு முன்னர் வுகானில் அல்லது வேறு எங்கும் கொரோனாவுடன் தொடர்புடைய பெரிய நோய் தொற்று குறித்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனா நோய் தொற்றிற்கு உரிய விலங்கு குறித்த ஆதாரம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
ஆய்வக கசிவுவினால் கொரோனா பரவியது என்பது சாத்தியமில்லை என்றும், உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு கூறியுள்ளது.