கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இப்போது எடுத்துள்ள முடிவு இறுதியானது என்று துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் றோகித அபேகுணவர்த்த தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர்,
‘கிழக்கு முனையம் எந்த நாட்டுக்கும் விற்கப்படாது, முழுமையாக சிறிலங்கா துறைமுக அதிகார சபையினால் நிர்வகிக்கப்படும். இந்த முடிவில் மாற்றம் செய்யப்படாது.
எனினும், மேற்கு முனையம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யப்படும்.
கிழக்கு முனைய உடன்பாட்டுடன் தொடர்புடைய இந்திய நிறுவனத்துடன் கலந்துரையாட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் முன்வைத்த நிபந்தனைகளுக்கு இணங்க அந்த நிறுவனம் மறுத்து விட்டது, இதன் விளைவாக உடன்பாடு ரத்து செய்யப்பட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.