மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, பிரதிவாதிகள் சமூகமளிக்காததால், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
இதன் போது பிரதிவாதங்களில் ஒருவர் மட்டும் முன்னிலையாகியிருந்தார். ஏனைய ஐந்து பிரதிவாதிகளும் பிரசன்னமாகவில்லை.
இதனால், மீண்டும் அவர்களுக்கு அறிவித்தல் கொடுத்து பெப்ரவரி 26 ஆம் நாள் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.