வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 776 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 21 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில், ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய 8 பேருக்கும், யாழ்ப்பாணத்தில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவருக்கும், மன்னாரில் நானாட்டான் ஹற்றன் நஷனல் வங்கி அதிகாரிகள் 5 பேருக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.