வாஹன் (Vaughan) பகுதியில் உள்ள FedEx பொதிகள் பரிமாற்றச் சேவை நிறுவனத்தில் பரவிய தொற்றினால், 50 இற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
FedEx பொதிகள் பரிமாற்ற நிலையத்தின் ஊடாக 54 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கு 15 பணியாளர்களுக்கு தொற்று இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்றம், சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இங்கிருந்து தொற்று பரவிய 54 பேரில், 29 பேர் பீல் பிராந்தியத்தையும், 13 பேர் ரொறன்ரோவையும், 10 பேர் யோர்க் பிராந்தியத்தையும், சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.