சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட, 4 ஆயிரத்து 554 பேர் எங்கிருக்கின்றனர் என்று தெரியவில்லை என அரசாங்க மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் ஆய்வகங்களால் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களை, மீண்டும் அடையாளம் காண முடியவில்லை என்றும், அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் தொடர்பாக சுகாதார அமைச்சில் இருந்து முரண்பட்ட வகையில் இரண்டு புள்ளிவிபரங்கள் வெளியிடப்படுவதாகவும், ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வரை, தொற்றுநோயியல் பிரிவின் தரவுகளின்படி, 72 ஆயிரத்து 174 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், ஆய்வக தொழில்நுட்பவியலாளர்களின் அறிக்கைகளின்படி, இந்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 728 பேர் என்றும், அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.