ஒன்ராரியோவில் உள்ள பல்கலைக்கழங்களில் உள்ள மாணவர்கள் தற்போதைய சூழலில் பருவகால விடுமுறைகளுக்கு வெளியேறிச் செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக,வெளிநாட்டு மாணவர்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.
புதியவகை கொரோனா வைரஸின் பரவலை தவிர்க்கும் முகமாகவே இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, மாணவர்களின் பாதுகாப்பும் மிகவும் அவசியமானது என்பதை ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிருவாகமும் அதிக சிரத்தையுடன் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.