கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 181பேர் பாதிக்கப்பட்டதோடு 84பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை எட்டு இலட்சத்து 17ஆயிரத்து 163பேர் பாதிக்கப்பட்டுள்ள தோடு 21ஆயிரத்து 088பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 37ஆயிரத்து 747பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 672பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




