இந்த ஆண்டுக்கான இந்தியாவின் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான, வீரர்கள் ஏலப்பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் விஜயகாந்த் வியஸ்காந்தின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் வீரர்களின் ஏலம் எதிர்வரும் 18ஆம் நாள், சென்னையில் இடம்பெறவுள்ள நிலையில், 292 வீரர்களைக் கொண்ட இறுதி ஏலப் பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவைச் சேர்ந்த ஒன்பது வீர்ர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
ஒன்பது வீரர்களில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது. 19 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் கடந்த ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடி, கவனத்தை ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.