ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்