அண்மைய நடவடிக்கைகள் சீனாவின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், உய்குர் இன சிறுபான்மையினரை நடத்தும் விதம் குறித்து தவறான செய்திகளை ஒளிபரப்பியதாக குற்றம்சாட்டி, பிபிசி உலக செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது.
சீன அரசின் இந்த நடவடிக்கைக்கு, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப் ( Dominic Raab ) கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கை ஏற்க முடியாதது, என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக மற்றும் இணைய சுதந்திரத்திற்கு சீனா மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்றும், இதனால் உலகளவில் சீனாவின் நற்பெயர் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார்.
அதேவேளை பிபிசி ஒளிபரப்புக்கு சீனா தடைவிதித்துள்ளமைக்கு, அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது.