தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
87 வயதுடைய, பழ நெடுமாறன், இலேசான காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்ததால் நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பழ.நெடுமாறன் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.