கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வது தொடர்பில் புதிய இரண்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் அனித்தா ஆனந்த் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
அதன்பிராகரம், மொடர்னா தடுப்பூசி நிறுவனத்திடம் 4மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 10.8மில்லியன் தடுப்பூசிகள் பைசர் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.





