நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், கருணாகரன், கலையரசன் உள்ளிட்ட ஏழு பேரை எதிர்வரும் ஏப்ரல் 30ம் நாள், முன்னிலையாகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக கல்முனை நீதிமன்றத்தில் தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற தடை உத்தரவை மீறி, குறித்த பேரணியில் பங்கேற்ற மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றில் சிறிலங்கா காவல்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கும் அழைப்பாணை விடுத்துள்ளது.





