மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றவுள்ள சிறிலங்கா இராணுவத்தின் மூன்றாவது அணி பயிற்சிகளை முடித்துக் கொண்டு, மயிலிட்டியில் இருந்து புறப்பட்டுள்ளது.
நேற்றுக்காலை 47 வாகனங்களைக் கொண்ட பாரிய தொடரணி, மயிலிட்டியில் இருந்து புறப்பட்டு, பருத்தித்துறை, நாகர்கோவில், பரந்தன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, வழியாக, மின்னேரியாவைச் சென்றடையவுள்ளது.
20 அதிகாரிகள் மற்றும் 223 படையினரைக் கொண்ட இந்த இராணுவ வாகனத் தொடரணி, வரும் 16ஆம் நாள் மின்னேரியாவைச் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்களாக பல்வேறு இடங்களிலும் பயிற்சிகளை நடத்திக் கொண்டு இந்த இராணுவ அணி, செல்வதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.