ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்பை மீறி, செயற்படுத்தவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் நாடா அல்-நஷீப் (Nada Al-nashif ),
“ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை, சிறிலங்கா அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், திருத்தம் செய்யப்பட்டே சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் முன்மொழியப்பட்ட சில வழிமுறைகளை செயற்படுத்த பல மாதிரிகள் ஆராயப்படும்.
சிரியா, மியான்மர் அல்லது வடகொரியா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் அல்லது முற்றிலும் புதிய உள்ளமைவு போன்றவற்றை சிறிலங்கா விவகாரத்தில் கையாளுவது குறித்தும் பரிசீலிக்க முடியும்.
பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான சிறந்த அணுகுமுறை எது என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானிக்கும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.