தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் தமிழ்க் கட்சிகள் மற்றும் வடக்கு- கிழக்கிலுள்ள கிறிஸ்தவ ஆயர்கள், ஆதீன முதல்வர்கள், மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் வவுனியாவில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா- இறம்பைக்குளம் தேவாலய மண்டபத்தில் இந்த கலந்துரையாடல், நடைபெற்றுள்ளது.
ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாகவும், தமிழ்த் தேசிய பேரவை உருவாக்கம் தொடர்பாகவும் கலந்துரையாடும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன், ஈபிஆர்எல்எப் சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வினோ நோகராதலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணாகரம், சிறிதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம், வேலன் சுவாமிகள், தென்கையிலை ஆதீன குருமுதல்வர் அகஸ்தியர் அடிகளார், திருமூலர் தம்பிரான் அடிகளார், திருகோணமலை ஆயர் நோயல் இமானுவேல், மன்னார் ஆயர் இமானுவேல் பெர்ணாண்டோ, யாழ்மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி, உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.