கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் இன்று விசேட வழிபாடு இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில், கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
பழ நெடுமாறன் விரைவில் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட இந்த வழிபாட்டில் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.