ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை முன்நின்று நடத்தும் நாடுகளின் பிரேரணைகளுக்கான பரிந்துரைகளை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை அவற்றை முன்வைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, ஜெனிவாவிற்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன் நின்று நடத்தும் நாடுகளான பிரித்தானியா, ஜேர்மன், கனடா, மொண்டிநீக்ரோ, வட மெசிடோனியா மற்றும் மலாவி ஆகியன புதிய பிரேரணையை முன்வைத்துள்ளன.