வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 6 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 15 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட போதே, அவர்களில் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 81 வயது பெண் ஒருவருக்கு அறிகுறிகள் இருந்தமையால் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வவுனியாவில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.