கனடிய சுகாதாரத்துறை அனுமதித்துள்ள அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை மிக வேகமாக விநியோகிப்பதற்கு ஒன்ராரியோ மாகாண நிருவாகம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்காக அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை விரைவில் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாகாண நிருவாகம் தெரிவித்துள்ளது.
ஒன்ராரியோவில் தொடர்ச்சியாக நீடித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணும் செயற்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அவசியம் என்றும் மாகாண நிருவாகம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஏற்கனவே பைசர் தடுப்பூசியின் முதல் அளவினை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட பைசர் தடுப்பூசிகள் கிடைக்கும் வரையில் காத்திருக்க வேண்டும் என்றும் மாகாண நிருவாகம் கூறியுள்ளது.





