ஒன்ராறியோவில் இன்று ஆயிரத்து 185 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை, ஆயிரத்து 258 தொற்றாளர்கள் பதிவாகினர் என்றும், இன்று அதனை விட சற்று குறைவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும், கடந்த செவ்வாய் தொடக்கம் வியாழன் வரையான நாட்களுடன் ஒப்பீடு செய்யும் போது, இந்த இரண்டு நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் மாகாணா சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரம் சராசரி ஆயிரத்து 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த வாரம் அந்த எண்ணிக்கை ஆயிரத்து 108 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் ஒன்ராறியோவில் புதிதாக 16 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தவர்களின் தொகை 6 ஆயிரத்து 960 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.