ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளவில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியினதும், அரசாங்கத்தினதும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த கலந்துரையாடல்கள் குறித்து அதில் பங்கேற்றவர்கள் பகிரங்கமாக கருத்துரைப்பதற்கு மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.