தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை அவசியமான நேரத்தில் கொள்வனவு செய்யத்தவறியமை காரணமாக பொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்தார்.
2021 வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போதும், ஆறு மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற கொரோனா தொற்று தொடர்பான விவாதத்தின் போதும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறினார்.
ஆனால் தற்போது கொள்வனவு செய்திருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை சனத்தொகையுடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை என்றும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
மேலும் தடுப்பூசி விநியோகத்தின்போது அரசாங்கம் தனது ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.





