டாமியன் அலார்ட் (Damien Allard) என்ற கனேடியர், உலகிலேயே மிகப் பெரிய சிவப்பு முள்ளங்கி வகை கிழங்கை அறுவடை செய்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இவர் ஏற்கனவே உள்ள உலக சாதனையை முறியடிக்கும் வகையில், மூன்று முள்ளங்கி கிழங்குகளை உற்பத்தி செய்துள்ளார் என்று, கின்னஸ் சாதனைப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது.
அவர் உற்பத்தி செய்துள்ள முள்ளங்கி கிழங்குகளில் பெரியது, 29 கிலோ எடையைக் கொண்டதாக இருந்துள்ளது.
ஏனைய இரண்டு கிழங்குகளும், 22.9 கிலோ மற்றும், 24.4 கிலோ எடைகளில் இருந்ததாகவும், கின்னஸ் சாதனைப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், 17.7 கிலோ கொண்ட முள்ளங்கியே உலகின் மிகப்பெரிய கிழங்கு என உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டிருந்தது.